பயிர் பாதுகாப்பு :: சக்கரைவள்ளி கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்

நுண்ணுயிரி அழுகல் நோய்:
அறிகுறிகள்:

  • கிழங்குகள் அல்லது வயல் வெளியில் இருக்கும் கிழங்கின் வேர் பகுதிகள் அழுகல் நோய் தாக்கி, பழுப்பு நிறத்தில் தாக்கப்பட்ட திசுக்கள் மாறி மற்றும் நீர் கோத்துவிடும்.
  • வேரில் புள்ளிகள், மற்றும் அடர் பழுப்புடன் விழுப்புகள் தோன்றும். சில வேர் பகுதிகள் வெளிபுறத்தில் ஆரோக்கியமாகத் தோன்றும். ஆனால் வேரின் உட்புறத்தில் அழுகிவிடும்
  • பாதிக்கப்பட்ட வேர்களிலுள்ள வேஸ்குலார் திசுக்களில் கரு நிற கோடுகள் காணப்படும். இறுதியாக குளிர் நிலையினால் அழுகிவிடும்.
  • வயல் வெளியில் ஏற்படுத்திய செடி படுக்கையில் உள்ள முதிர்ந்த வேர்கள் அழுகிவிடும். பழுப்பு நிறத்திலிருந்து கருமையாக மாறி நீரில் ஊரிய தண்டுகள் மற்றும் காம்புகளில் புள்ளிகள் ஏற்படும். இறுதியில் தண்டுகளில் நீர் கோத்து குழைந்து கொடிகள் காய்ந்துவிடும்.
  • வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு கொடிகள் குழைந்துவிடும். இதனால் சில சமயங்களில் முழு செடிகளும் அழிந்துவிடும்.

நோய் பரவுதல்:

  • நுண்ணுயிரிகள் வெட்டுப் பகுதிகளில் ஊடுருவிடும். இவை பயிர்களை சேதப்படுத்தும் அல்லது அதனுடைய களைச் செடிகளை சிதைத்துவிடும்.
  • நோய் பரப்பும் காரணிகள் மண், நோயற்ற தாய் செடி, மசுபடிந்த நீர் மற்றும் அறுவடை இயந்திரங்களில் நோய் காரணிகள் பரவும்
  • குளிர் வானிலையிலும், வெப்ப நிலையிலும் நோய் பரவக்கூடும்
  • 800  பே வெப்ப நிலையில் நோயின் அறிகுறி காண இயலாது. ஆனால் 860 பே வெப்பநிலை அல்லது அதிக வெப்ப நிலையின் போது நோயின் அறிகுறிகள் பரவக்கூடும்.

கட்டுப்பாடு:

  • நுண்ணுயிரி அழுகல் நோயிலிருந்து கட்டுப்படுத்த கிழங்குகளை உற்பத்தி நிலையின் போது வெட்டுகளில் கையாள வேண்டும்.
  • வயலிலுள்ள நோயற்ற தாய் செடியின் வேர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
  • சேமிப்பு கிடங்குகளில் நோய் தாக்கப்பட்ட வேர்களை தேர்ந்தெடுத்து அகற்றி விட வேண்டும்
  • மண் மேற்பரப்பில் வளர்ந்திருக்கும் கொடிகளை மாற்று இடத்தில் நடுவதற்கு பயன்படுத்தலாம்.

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015